சகோதரத்துவம், நீதிக்கு கட்டுப்படுதல், பொறுமையான சிந்தை மனித வளர்ச்சிக்குத் தேவை: கே.ரோசய்யா
சகோதரத்துவம், நீதிக்கு கட்டுப்படுதல், பொறுமையான சிந்தனை ஆகிய இம்மூன்றும் மனித வளர்ச்சிக்கு அவசியம் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.


சகோதரத்துவம், நீதிக்கு கட்டுப்படுதல், பொறுமையான சிந்தனை ஆகிய இம்மூன்றும் மனித வளர்ச்சிக்கு அவசியம் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் லிங்கா குளோல் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் புதிய பிபின் சந்திரபால் மைய நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. சென்னை, ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் டாக்டர் அறிவழகி வரவேற்றார்.லிங்கா குளோபல் பள்ளி மற்றும் பிபின் சந்திரபால் மைய நூலத்தைத் திறந்து வைத்து தமிழக ஆளுநர் கே.ரோசையா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, இலக்கிய, பொது அறிவியல் உள்ளிட்ட அனைத்து மொழிப் புத்தகங்கள், ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட 3 மாடி குளிரூட்டப்பட்ட பிபின் சந்திரபால் மைய நூலகத்தையும், சர்வதேச தரம் வாய்ந்த லிங்கா குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியையும் திறந்து வைத்துள்ளேன். இது தென் தமிழகத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு.
கல்வி தான் நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. பல்கலைக்கழகங்கள் என்பது மிகவும் உயர்ந்தது. ஆனால் மிகவும் இளமையானது. இது மாணவர்களிடம் உண்மையான நீதியை வளர்ப்பதிலும், மனதை ஒருநிலைப்படுத்தும் முறைகளை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டும். பாடதிட்டத்தை மட்டும் செயல்படுத்தக்கூடாது.
கல்வி என்பது மாணவர்களுக்கு சுத்தமான மனநிலையைக் கொடுத்து தன்னைத்தானே உண்மையையும், நீதியையும் வளர்த்துக்கொள்ளும் சக்தியை கொடுக்க வேண்டும். மேலும் கல்வி மனிதன் கொள்கையுடனும், குணத்துடனும், திறமையை வளர்த்துக் கொண்டு இருப்பதற்கான சக்தியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.மூன்றாவது முறைக் கல்வி என்பது, மாணவர்கள் சமூகத்திற்காகவும், படிப்பறிவோடு ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்றார் அவர்.
விழாவில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணா, பார்மஸி கல்லூரி முதல்வர் பழனிவேல், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் சுப்புராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். லிங்கா குளோபல் முதல்வர் அல்கா சர்மா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...