இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசுப் பள்ளிகளின் தரம் குறையவில்லை: கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.

அரசுப் பள்ளிகளின் தரம் குறையவில்லை என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் கூறினார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 7:41 am

கோ.ஜெயக்குமார்

அரசுப் பள்ளிகளின் தரம் குறையவில்லை என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை மாணவர் சேர்க்கை விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் முன்னிலை வகித்தார்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் வரவேற்றார். 2015-16-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்கைகைத் தொடங்கி வைத்து வெ.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் முழுத் தகுதி பெற்ற ஆசிரியர்களை அரசு, விதிமுறைகளின் படி பல்வேறு தேர்வுகளை நடத்தி தேர்வு செய்கிறது. பொதுமக்கள் அரசுப் பள்ளிகள் மீது அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியத்தில், நெருக்கடியில், முழு கல்வித் தகுதி பெறாத ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.  தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இதுபோன்ற ஒரு முன்மாதிரியான ஊராட்சி ஒன்றியப்பள்ளி உள்ளது என்பது எனக்கும் தொகுதிக்கும் பெருமை அளிப்பதாக உள்ளது. முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் இப் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு, தியாக மனப்பான்மையினால்தான் இன்று பல்வேறு போட்டிகளின் இடையே, இப் பள்ளியில் சுமார் 24 மாணவ மாணவியர் சேர்ந்துள்ளார்கள். பள்ளிக்குத் தேவையான உதவிகள் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக உள்ளேன் என்றார் அவர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி வாழ்த்துரை வழங்குகையில் கூறியதாவது: தமிழக அரசு கல்வித் துறைக்காக ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசு  16 விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. அரசுப் பள்ளியில் கல்வித் தரம் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்க பணம் ஒரு தடையாக இல்லாத வகையில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார் அவர். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, ஆசிரியர்கள் செ.சண்முகநாதன், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், ந.ரெங்கலதா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கிராம கல்விக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி, கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டோர். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.