இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 600 மரக்கன்று நடும் திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 6:21 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருமாள்பட்டி நாடார் உறவின்முறைத் தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கலையரசன் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.லெனின் செல்வராஜ், 600 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து வியாபாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிப் பேசுகையில் கூறியதாவது: சங்கம் சார்பில் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் தற்போது பராமரிக்கப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நகரில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து, நம்மால் முடிந்த அளவு புவி வெப்பமயமாதலை தடுத்து நாட்டிற்கு உதவ வேண்டும். நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் கே.சி.பி.சி.முத்துராஜன் நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.