இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ராஜபாளையத்தில் நடைபெற்ற விபத்தில் காயமுற்றவருக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.5 லட்சம் இழுப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும்

News image
Updated On :28 ஏப்ரல் 2015, 11:52 am

கோ.ஜெயக்குமார்

ராஜபாளையத்தில் நடைபெற்ற விபத்தில் காயமுற்றவருக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.5 லட்சம் இழுப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ராஜபாளையம், சந்பந்தபுரம், கீழபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தராஜா (39). இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு மெட்டல் பவுடர் கம்பெனியில் உதவி பொறியாளராக வேலை செய்து வந்தார். 20.5.13-ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம், புகேழந்தி தெரு வழியே சிக்கந்தராஜா வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிக்கந்தராஜா பலத்த காயமடைந்தார்.

தனக்கு இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், கோவில்பட்டியில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, சிக்கந்தராஜாவுக்கு ரூ.5,09,200 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.