கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை

News image
Updated On :17 பிப்ரவரி 2015, 1:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. தொடர்ந்து 21-ம் தேதி வரை 5 நாட்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர் தலைமை வகித்தார். நாட்டியாஞ்சலி மாலை 4 மணிக்கு தொடங்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு  புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது.

நாட்டியமாடிய கலைஞர்கள்: சிதம்பரம் சிவசக்தி இசை நடனப்பள்ளி மாணவர்கள், சென்னை வாமதேவ கலைக்கூட நாட்டியப்பள்ளி மாணவர்கள், பெங்களூர் முத்ரிகா பவுன்டேஷன் மாணவர்கள், சின்னமனூர் சித்ரா மாணவியர்கள் எஸ்.மங்கையர்கரசி, ஆர்.வர்ஷினி, அண்ணாமலைப் பல்கலை. தமிழிசை துறை நாட்டிய மாணவர்கள். சின்னமனூர் ஏ.சித்ரா, சென்னை ஹோபனா சந்திரசேகர், சென்னை பத்மபூஷன் பத்மாசுப்பிரமணியம், சென்ஏனை விநித், ஜெயப்பிரியா விக்ரமன், முரளிதரன், வசந்தி, மும்பை ராஜராஜேஸ்வரி நாட்டிய கலாமந்திர் மாணவர்கள், மும்பை ரேவதி சீனுவாசன், சென்னை அனிருத் கேநைட், டாக்டர் மகாலட்சுமி பக்தவத்சலம், தீபா நல்லப்பன், கோவை பரதாலயம் நாட்டியப்பள்ளி மாணவர்கள், மகராஷ்டிரா அபிநயா இன்ஸ்டியூட் ஃபைன் ஆர்ட்ஸ் மாணவர்கள், பெங்களூர் ஆர்.வாசுதேவ், சேலம் அன்னை நாட்டியலாலயா மாணவியர்கள், மும்பை நித்ய ரஞ்சனி ஃபைன் ஆர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள், கோவை ஸ்ரீசரஸ்வதி கலாலயா மாணவர்கள், பெங்களூர் ஸ்வேதா வெங்கடேஷ்.ஸ்கர தீட்சிதர் தலைமை வகித்தார்.

விழா ஏற்பாடுகளை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.நடராஜ சுப்பிரமணியன் தீட்சிதர், செயலாளர் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், நிர்வாகிகள் ஆனந்த தாண்டவ தீட்சிதர், ஜே.சிவச்செல்வ தீட்சிதர், ஹோம.விஜயபால தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.