இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்: பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலதிபரிடம் இளம் பெண் மற்றும் அவரது இரு மகள்கள் மிரட்டி ரூ.20 லட்சம் கேட்டதாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து

News image
Updated On :19 பிப்ரவரி 2015, 2:19 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலதிபரிடம் இளம் பெண் மற்றும் அவரது இரு மகள்கள் மிரட்டி ரூ.20 லட்சம் கேட்டதாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வடக்குரதவீதி ஒட்டியுள்ள தகரகொட்டகைக்குள் ஸ்ரீதேவி மேட்சிங் சென்டர் வைத்திருப்பவர் ச.மாரிமுத்து மூப்பனார் (65). இவரது வீட்டிற்கு பின்புறம் 24.1.15-ம் தேதி காலை, அழகிய இளம் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வந்து நின்று கொண்டிருந்துள்ளார். மாரிமுத்துவைப் பார்த்து இளம் பெண் மாமா, மாமா என்று கூச்சலிட்டு கதவைத் தட்டியுள்ளார். மாரிமுத்து வீட்டு கதவைத் திறந்துள்ளார். நீங்கள்தான் என் கணவர் என்றும், குழந்தைகள் உங்கள் குழந்தைகள் என்று கூச்சலிட்டுள்ளார். மாரிமுத்து இவர்களை வீட்டிற்குள் அழைத்து விசாரித்துள்ளார். அதில் இளம் பெண்ணின் பெயர் செரினாபீவி (எ) சரிதா என்றும் பிள்ளைகளின் பெயர்கள் கட்சிதாபீவி (எ) யசோதை, காமிலாபீவி (எ) சாந்தி என்று கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து மாரிமுத்து தனது கடைக்குச் சென்றுள்ளார். அங்கும் இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்று முன்பு போலவே கூச்சலிட்டுள்ளார்.பின்னர் மாரிமுத்துவிடம், நீங்கள்தான் என் கணவர் என்று கூறி உங்கள் வீட்டின் முன்பு தீக்குளிப்பேன் என்று மிரட்டியதுடன், மாரிமுத்துவை அவரது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணின் குழந்தைகள், உங்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என்று கூறி மாரிமுத்துவை மிரட்டி வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்தார்களாம். மேலும் மூவரும் சேர்ந்து ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்களாம்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாரிமுத்து, மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து போலீஸார் செரினாபீவி (எ) சரிதா மற்றும் அவரது இரு பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.