ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட சிறப்பு ஏற்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் அதிமுக வினர் தீவிரமாக ஏற்பாடு


ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் அதிமுக வினர் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இது குறித்து ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி (செவ்வாய்கிழமை), காலை மடவாளர்வளாகத்தில் உள்ள காளியம்மன்கோவிலில் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வந்து தமிழகத்தை மிகுந்த மனநிறைவு, மன அமைதலுடன் ஆட்சி செய்ய வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் நடைபெறுகிறது.
பின்னர் ஒன்றியக் குழுத் தலைவர் தனது சொந்தச் செலவில் 670 பேருக்கு வேஷ்டி, 670 பேருக்கு சேலை, 1670 பேருக்கு சிறப்பு அன்னதானம் செய்கிறார்.
விழாவில் மக்களவை உறுப்பினர்கள் டி.ராதாகிருஷ்ணன், எம்.வசந்தி முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் எஸ்.ஆர்.துரைப்பாண்டியன், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் கே.மயில்சாமி, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் கே.முத்துப்பாண்டியன், வழக்குரைஞர்கள் எம்.ஜெகதீசன், ஆர்.முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மீனா, கே.அய்யம்மாள், எஸ்.மயில்ராவணன், ஆர்.ராஜகேபால் மற்றும் கட்சியியின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து விரிவாக செய்து வருகிறார் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...