இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் நம்பிக்கை மோசடி செய்ததாக கணவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மேரி டயனா தீபிகா (31). இவர் காடனேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்

News image
Updated On :22 பிப்ரவரி 2015, 11:33 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் நம்பிக்கை மோசடி செய்ததாக அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மேரி டயனா தீபிகா (31). இவர் காடனேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேலகோபாலபுரம், துரைராஜ் மகன் ஆல்பர்ட்ராஜ் (41) என்பவருக்கும் 16.5.14-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆல்பர்ட்ராஜூக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதாம்.  மேலும் ஆண்மைக் குறைவு என்று நன்கு தெரிந்தும் அதனை மறைத்து மேரி டயனா தீபிகாவை ஆல்பர்ட்ராஜ் திருமணம் செய்தாராம்.

ஊதாரித்தனமான செலவுகளுக்காக ஆசிரியை மேரி டயனா தீபிகாவின் 10 பவுன் நகைகளை ஆல்பர்ட்ராஜ் வாங்கி அடகு வைத்து செலவு செய்தாராம். மேலும் ஆசிரியை சம்பாதித்து வாங்கி வைத்த 9 பவுன் நகைகள், பணம் ரூ.5.70 லட்சம் ஆகியவற்றையும் ஆல்பர்ட்ராஜ் மோசடி செய்துவிட்டாராம். இவ்வாறு மனதளவில் பெரும் துன்புறுத்தல் கொடுத்து வரும் கணவர் ஆல்பர்ட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேரி டயனா தீபிகா புகார் செய்தார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆல்பர்ட்ராஜை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.