இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க வேண்டி ஆண்டாள் கோவில் தங்கத் தேர் இழுத்த அமைச்சர்

தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.

News image
Updated On :23 பிப்ரவரி 2015, 2:27 am

கோ.ஜெயக்குமார்

தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலிதாவின் பிறந்தநாள் 24-ம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டும், அவர் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கட்சியின் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மல்லி எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

பின்னர் தங்கத் தேரை சன்னதியைச் சுற்றிலும் இழுத்தனர். சிறப்பு பூஜைகளை முத்துபட்டர், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி, அத்திகுளம் வங்கியின் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுக செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.