இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :1 ஜனவரி 2015, 5:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் கோவிலில் அத்யயன உற்சவத்தில் பகல் பத்து உற்சவம் நிறைவடைந்து ராப்பத்து உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. 1-ம் திருநாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7.40 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

பெரியாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், வேதாந்ததேசிகர் ஆகியோர் எதிர்கொண்டு அழைக்க, பரமபதவாசல் வழியே முதலில் வடபத்ர சயனரும் அவரைத் தொடர்ந்து ஆண்டாள்-ரெங்கமன்னாரும் வந்தனர். பின்னர் பக்தர்கள் பரமபதவாசல் வழியே வந்தனர்.

முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை ரகுபட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், கோவில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், வேதபிரான் பட்டர், சுதர்ஸன் பட்டர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செய்திருந்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளிதரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.