இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மம்சாபுரத்தில் வீடு புகுந்து ரூ.1.80 லட்சம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச்

News image
Updated On :3 ஜனவரி 2015, 11:34 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், 1-வது மெயின் ரோட்டியில் குடியிருந்து வருபவர் சுந்தரி (45). இவரது கணவர் கோவிந்தன். ஜனவரி 1-ம் தேதி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டியில் உறவினர்கள் இறந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்களாம்.

2-ம் தேதி கோவிந்தன் மட்டும் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பின்னர் ஆடு கிடையை பார்க்கச் சென்றுவிட்டாராம். அப்போது வீட்டைப் பூட்டி வழக்கம்போல், சாவியை கதவின் நிலை மீது வைத்துச் சென்றுள்ளார். 3-ம் தேதி (சனிக்கிழமை) காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து கம்மாப்பட்டி சென்று மனைவியை அழைத்துக் கொண்டு வந்து வீட்டைப் பார்த்துள்ளார். பீரோவின் உள்ளே உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வேறொரு சாவி இருந்துள்ளது. உள்ளே இருந்த பணம் ரூ.1.80 லட்சம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு உள்ளிட்டவை அப்படியே இருந்துள்ளது.

இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.