இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளம் பெண்ணைக் காணவில்லை: தந்தை போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா நாடார் மகன் ஜான்கென்னடி (51). இவரது மகள் அனிதா மேரி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர்

News image
Updated On :4 ஜனவரி 2015, 12:14 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் தனியே இருந்த தனது மகளைக் காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா நாடார் மகன் ஜான்கென்னடி (51). இவரது மகள் அனிதா மேரி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோ.புதூர், அந்தோணிசாமி மகன் சாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இருவரும் கோயமுத்தூர் அருகேயுள்ள அன்னூரில் குடியிருந்து வந்துள்ளனர். சாமிநாதன் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை சரியில்லை என்று கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அயன்நத்தம்பட்டி வந்து, ஜான்கென்னடி வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள்.புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனைக்கு அனிதா மேரியை வீட்டில் விட்டுவிட்டு, ஜான்கென்னடி குடும்பத்துடன் சென்றுள்ளார். திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகளைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததையடுத்து, ஜான்கென்னடி நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனிதா மேரியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.