ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இரவு மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எம்.கதிரேசன் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எம்.கதிரேசன் திடீர் வருகை புரிந்தார். குழந்தைகளுக்கான வார்டுக்குச் சென்ற அவர், அங்கு பணியில் இருந்த டாக்டர் காளிராஜ் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஒவ்வொரு நோயாளிகளிடமும் அளிக்கப்படும் சிகிச்சைகள், அரசு மருத்துவமனையில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் கதிரேசன் பேசுகையில் கூறியதாவது:
பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உள்ள உயர்தர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இங்குள்ள பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கென்று சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை தொடர்ச்சியாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது டெங்கு உள்ளதா என்பதை கண்டறிவதற்கான எலிஸா பரிசோதனை செய்வதற்கான கருவி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் கண்டு 47 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 27 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜபாளையம் மருத்துவமனையில் 8 பேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவர்களில் 7 பேருக்கும் டெங்கு பாதிப்பு உள்ளது. இவர்கள் தற்போது குணமடைந்து வருகிறார்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள நோயாளிகள் மட்டுமே மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் ஒரு செவிலியருடன் பாதுகாப்பாக 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கிறோம்.
மேலும் டெங்கு பாதிப்பை குறைக்க அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு மற்றும் பப்பாளி இலைச் சாறு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுகி பயன்பெற வேண்டும் என்றார் டாக்டர் கதிரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

