இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எண்ணெய்காப்பு உற்சவத்தையொட்டி ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ஸ்ரீவில்லிபுத்தூர்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8 (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, புதன்கிழமை இரவு

News image
Updated On :7 ஜனவரி 2015, 2:51 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ஸ்ரீவில்லிபுத்தூர்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8 (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் வியாழக்கிழமை தொடங்கி இம் மாதம் 15-ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறுகிறது.இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவடபத்ரசயனரிடம் நோன்பு இருக்க அனுமதி கேட்கும் (பிரியாவிடை) நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்காக ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, மாடவீதி வழியே பெரிய பெருமாள் சன்னதியை வந்தடைந்தார். ஸ்ரீபெரிய பெருமாள் சன்னதியில் ஸ்ரீஆண்டாள் ஏகாந்தத் திருமஞ்சனம், ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்று, திருவாராதனம், திருகாப்பு நீக்கல் நடைபெற்றது.

அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்றது. ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேருதல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.