ஆண்டாள் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான திருப்பாவை போட்டி தக்கார் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான திருப்பாவை போட்டி தக்கார் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு இப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வழங்கப்பட்டு, திருப்பாவை வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டது.
இதில் முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பல்வேறு பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களது வயது மற்றும் வகுப்புக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்தப்பட்டது. திருப்பாவை எண்ணைக் கூறி திருப்பாவையை கேட்டல், திருப்பாவையைக் கூறி எண்ணைக் கேட்டல், திருப்பாவையை மனப்பாடமாக ஒப்புவித்தல் என போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியை கோவிலின் சுதர்ஸன் பட்டர் நடத்தினார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு செயல் அலுவலர் ராமராாஜா பரிசுகளை வழங்கினார். மேலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...