ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மம்சாபுரத்தின் அனைத்து வார்டுகளுக்கும் சென்ற இயக்குநர், கழிவு நீர் பாதைகள், குப்பைகள் தேங்கியிருந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். முறையாக அனைத்து வார்டுகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், கொசு மருந்துகளை முறையாக அடிக்கவும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் குடிநீர் குழாய்களின் அருகே தேங்கும் நீரை உடனே அப்புறப்படுத்தவும், குடிநீரில் முறையான அளவு குளோரின் மருந்து கலந்து விநியோகிக்கவும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் உரக்கிடங்கைப் பார்வையிட்ட அவர், அது முறையாக பேணப்படுவதாகக் கூறினார். அங்கு அவர் மரக்கன்றும் நட்டார்.
செய்தியாளர்களிடம் இயக்குநர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: டெங்கு கொசு பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் கண்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் போது மதுரை மண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ், உதவி செயற் பொறியாளர் சம்பத்குமார், செயல் அலுவலர்கள் சித்திரைக்கனி, பூங்கொடி முருகு, ஞானசேகரன், பணி ஆய்வாளர்கள் கருப்பையா, கலைஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக பேரூராட்சிகளின் இயக்குநர் சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குநர் பணீந்தர்ரெட்டி ஆகியோருடன் சென்று நேரடியாக டெங்கு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

