இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி கடத்தல்: கணவர் போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி மகன் பிரான்சிஸ் சத்தியசீலன் (24).இவர் விருதுநகர், கத்தாளம்பட்டி, கோபால் என்பவரின் மகள் பிரியா (24) என்பவரைக் காதலித்து

News image
Updated On :16 ஜனவரி 2015, 10:22 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை அவரது தம்பி கடத்திச் சென்று விட்டதாக கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி மகன் பிரான்சிஸ் சத்தியசீலன் (24).இவர் விருதுநகர், கத்தாளம்பட்டி, கோபால் என்பவரின் மகள் பிரியா (24) என்பவரைக் காதலித்து 26.11.14-ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் தனிப்பயிற்சி மையத்தில் பிரியா, வங்கிப் பணியாளர் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது அடிக்கடி தம்பி, தங்கை மற்றும் அம்மா ஆகியோர் தங்கள் வீட்டிற்கு வரும்படி பிரியாவை வற்புறுத்தி வந்ததாக, பிரான்சிஸ் சத்தியசீலனிடம் பிரியா கூறியுள்ளார். அதற்கு பிரான்சிஸ், சிறிது காலம் கழித்துச் செல்லலாம் என்று கூறி வந்தாராம்.

இந்நிலையில் விருதுநகர் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவியை வீட்டில் காணவில்லையாம். பிரியாவின் தம்பி பிரபு என்பவர் பிரியாவை கடத்திச் சென்றுவிட்டதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பிரான்சிஸ் சத்தியசீலன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரியாவைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.