ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் சேவகன். இவரது மகள் விஜயா (21). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இம் மாதம் 6-ம் தேதி


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்ததில் தீக்காயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் சேவகன். இவரது மகள் விஜயா (21). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இம் மாதம் 6-ம் தேதி வீட்டில் மண்ணெண்னை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஸ்டவ் வெடித்ததாம். இதில் உடலில் மண்ணெண்னைபட்டு தீக்காயம் அடைந்த விஜயா, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...