பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் முதல் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On :9 ஜனவரி 2024, 11:13 am IST

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு

அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

சிறப்புப் பிரிவினருக்கு  விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணு வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு வரும் 19-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினர் உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 25-ஆம் தேதியன்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடையும்.

2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

சென்னை தாகூர், கோவை-பி.எஸ்.ஜி., கோவை-கற்பகம், ஈரோடு ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எஸ்ஆர்எம் குழுமம்), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் கற்பக விநாயகா, உள்ளிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

சென்னை இஎஸ்ஐ நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின் எதிர்கால இறுதித் தீர்ப்புக்கு மாணவர் சேர்க்கை கட்டுப்பட வேண்டும் என்பதால், ஏற்கெனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி முதல் கட்ட கலந்தாய்வில் இடம்பெறாது  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.