இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிமுக பிரமுகரைத் தாக்கிய ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளரை ஆபாசமாகப் பேசி தாக்கிய, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக

News image
Updated On :8 மார்ச் 2015, 1:15 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளரை ஆபாசமாகப் பேசி தாக்கிய, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்கள்.

கூமாப்பட்டி, ராமசாமியாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கி.கிருஷ்ணமூர்த்தி (49). இவர் அதிமுக கிளைச் செயலாளர்.இவர் கான்சாபுரம் ஊராட்சி எழுத்தராகவுள்ள கு.அய்யனார் குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கேள்வி கேட்டு மனு தாக்கல் செய்திருந்துள்ளார். இதனை அறிந்த ஊராட்சி எழுத்தர் அய்யனார், அவ்வப்போது கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி வந்துள்ளார்.

புதன்கிழமை இரவு சொந்த வேலையாக கிருஷ்ணமூர்த்தி தனது இரு சக்கர வாகனத்தில் ராமசாமியாபுரத்திலிருந்து கிருஷ்ணன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார்.முனியாண்டி கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஊராட்சி எழுத்தர் அய்யனார் மற்றும் நால்வர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து நிறுத்தியுள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாகப் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகவுள்ள ஊராட்சிமன்ற எழுத்தர் அய்யனார் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.