முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வீடு புகுந்து கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: இரு போலீஸார் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரது ஊனமுற்ற தாயை மானபங்கம்

News image
Updated On :4 டிசம்பர் 2016, 9:22 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரது ஊனமுற்ற தாயை மானபங்கம் செய்ததாக இரு போலீஸார் உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி ஆரோக்கியமேரி (45). விபத்தில் பாதிக்கப்பட்டு, இடது கையை இவர் இழந்துவிட்டார். இவரது மகன் பரலோகராஜா. கல்லூரி மாணவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர் ச.முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருபவர் செல்லத்துரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருபவர் பூபதிராஜா, தொம்பக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சேகர் (எ) சந்திரசேகர். 

பரலோகராஜா நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்னையில் வியாழக்கிழமை வழக்குரைஞர் முருகேசன், காவலர்கள் செல்லத்துரை, பூபதிராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பரலோகராஜாவின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் கம்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

தடுக்க முயன்ற தாய் ஆரோக்கியமேரியை வீட்டிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அவரை மானபங்கம் செய்தார்களாம். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்களாம்.

இது குறித்து ஆரோக்கியமேரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் சார்பு ஆய்வாளர் ஆர்.கீதா வழக்குரைஞர் முருகேசன், காவலர்கள் செல்லத்துரை, பூபதிராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இவர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.