முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சார்பில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் கூட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சார்பில் இரங்கல் கூட்டம்

News image
Updated On :11 டிசம்பர் 2016, 9:13 am

கோ.ஜெயக்குமார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சார்பில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்க்சிக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ரா.தா.இன்பத்தமிழன், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலங்கரிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி முடி காணிக்கை செலுத்திய 450 கட்சித் தொண்டர்களுக்கு வேஷ்டி, சட்டை, துண்டை வழங்கி கட்சியின் மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்கி வரும் அதிமுகவின் தொண்டர்கள், எந்த சூழ்நிலையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதிகாக்கும் தமிழக மக்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தமிழக மக்களும், கட்சித் தொண்டர்களும் வைத்துள்ள மரியாதையுடன் கலந்து பிரிக்க முடியாத அன்பு உள்ளிட்ட எல்லா காரியங்களையும் பார்தது இந்திய நாடே வியந்துபோயுள்ளது என்றார் அவர். இதே நிலையை கட்டிக்காக்க கட்சியின் தலைமை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொண்டர்கள் கட்டுப்பட்டு நடப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கி.காளிமுத்து, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் ஒன்றியப் பொருளாளர் த.முத்தையா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.