பாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை நீக்கம்!
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக பாகிஸ்தான் திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உரி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்கியதில் 19 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனால் இரு நாட்டு உறவுகளும் சீர்குலைந்தன. இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிரான கண்டனம் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் பாலிவுட் திரைப்படங்களை காலவரையற்ற தற்காலிதமாக திரையிடுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டின் திரையங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக டான் ஆன்லைன் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் ஷொராய்ஸ் லஷ்காரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய சினிமா தடையால் தங்கள் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்திய படங்களை திரையிட இதுவே சரியான நேரம் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சிந்திக் நடிப்பில் வெளியாகியுள்ள ஃப்ரீக்கி அலி திரைப்படம் முதலில் திரையிடப்படும் எனக் கூறிய அவர், அரசின் வரவேற்பு எப்படியுள்ளது என்பதை அறிந்து அமிர்கானின் ‘தங்கல்’ படம் திரையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க தடை விதித்ததை அடுத்து புறக்கணிப்பு விதிக்கப்பட்டது.
பாக்கிஸ்தானில் பாலிவுட் திரைப்படங்கள் பிரபலமானது. அவற்றினை திரையிடப்படுவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் வேகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறபப்படுகிறது.
1965 போரின் போது இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. 43 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 2008-இல் பாகிஸ்தான் சினிமாவிற்கு திரும்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...