இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு: சுப்பிரமணியன் சுவாமி

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. அதை சசிகலா அணிக்குதான் ஒதுக்கியிருக்க வேண்டும்

News image
Updated On :28 மார்ச் 2017, 11:15 am

தினமணி

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. அதை சசிகலா அணிக்குதான் ஒதுக்கியிருக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: - 1971-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தீர்ப்பானது எந்த அணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்க வேண்டும் என்கிறது.

அதனடிப்படையில் சசிகலா அணிக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். சசிகலா அணியில்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் எம்.எல்.ஏக்களே இல்லை. இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறானது என்றுதான் சொல்வேன் என்று கூறினர்.

மேலும்  இரட்டை இலையை முடக்க பாஜக நிர்பந்தம் செய்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அது தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.