கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் கார் மோதி இளைஞர் பலி
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஓ. ராகவேந்திரா சென்ற சொகுசு கார் பாதசாரி ஒருவர் மீது மோதி பலியான சம்பவம்


பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஓ. ராகவேந்திரா சென்ற சொகுசு கார் பாதசாரி ஒருவர் மீது மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மடப்புரா பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு எடியூரப்பா மகன் ராகவேந்திரா மற்றும் ஷகரிபுரா எம்.எல்.ஏ ராகவேந்திரா ஆகியோர் எஸ்யூவி வகை சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையைக் கடக்க முயன்ற சுரேஷ்(24) என்பவர் மீது சொகுசு கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஹொனலலி காவல் ஆய்வாளர் ஜே.ஆர்.ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.பீ. ரணகசார்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்து குறித்து நியமதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
கடந்த மக்களவை தேர்தலின்போது, பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது அந்த தொகுதி எம்.பி.யாக எடியூரப்பா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...