மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களின் ஆன்லைன் வாக்கு எண்ணி முடிந்த பின்னர் 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1,127 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



