ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜுக்கு கொலை மிரட்டல்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகாராஜுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.

News image

பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜுக்கு கொலை மிரட்டல்

Updated On :11 ஆகஸ்ட் 2020, 9:38 am

PTI

உன்னாவ் : பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகாராஜுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எனக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்தது.

அதில் பேசியவர், விரைவில் குண்டு வைத்து என்னை கொல்ல போவதாகவும், காஷ்மீர் விரைவில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்று கூறினார்.

மேலும், உங்கள் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் ஒரு கண் வைத்திருப்பதாக கூறினார்கள் என சாக்‌ஷி தெரிவித்தார்.

சாக்‌ஷி அளித்த புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் ரோஹன் பி கனய் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.