கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பஞ்சாபில் டிச.31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வா்

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து மாநில முதல்வர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.

News image

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

Updated On :11 டிசம்பர் 2020, 11:33 am

ANI

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து மாநில முதல்வர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.

மாநிலத்தில் கரோனா தொற்று, இரண்டாவது அலையாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

உணவகங்கள், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயங்கும் என உத்தரவிடப்பட்டது.

முகக் கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கும் தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த அபராதத் தொகை ரூ.1,000-ஆக உயா்த்தப்பட்டது.

இதையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது. மேலும் டிசம்பர் 15ஆம் தேதி வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.