இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராமநாதபுரத்தில் இரு செவிலியர் இடமாற்றத்தை கண்டித்து செவிலியர்கள் திடீர் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு ஆண் செவிலியர்கள் இடமாற்றப்பட்டதை கண்டித்து மற்ற செவிலியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ராமநாதபுரத்தில் செவிலியர்கள் திடீரென பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On :10 ஜூலை 2020, 6:26 am

DIN


ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு ஆண் செவிலியர்கள் இடமாற்றப்பட்டதை கண்டித்து மற்ற செவிலியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் செவிலியர்கள் உள்ளிட்ட 120 செவிலியர்கள் பணியில் உள்ளனர். கரோனா சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்துவரும் செவிலியர்களுக்கு தரமான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமையால் 5 செவிலியர்கள் திடீரென மயக்கமடைந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.

புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கை அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள ஆண் செவிலியர்கள் சி.கோபாலகிருஷ்ணனை திருவாடானை மருத்துவமனைக்கும், வி.மோகன்தாஸை ராமேஸ்வரம் மருத்துவமனைக்கும் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு காலத்தில் இரு செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென வெள்ளிக்கிழமை காலையில் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செவிலியர்கள் பணிபுறக்கணிப்பு குறித்து செவிலியர்கள் சங்க மாவட்ட நிர்வாகி வீரம்மாள் கூறுகையில், அடிப்படை வசதி கோரும் எங்களை பழிவாங்குவது போல இடமாறுதல் செய்வது சரியல்ல. இடமாறுதல் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யாவிடில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்றார். செவிலியர்களுடன் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.