/

கேரளத்தில் 11 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கேரளத்தில் 11 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
Updated On :19 மார்ச் 2021, 12:47 pm

DIN

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 1,984 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,00,276ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,467ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,965 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,70,343ஆக உள்ளது. தற்போது 25,158 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.