காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டில் ஒரே நாளில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2023, 5:16 am

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 9,355 ஆக இருந்த தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 7,533 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49 கோடியாக உள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,468 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,780 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் 4,43,47,024 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 65,286 ஆக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 53,852 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.