மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சிறப்புச் செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

Updated On :28 செப்டம்பர் 2020, 6:01 am
4:43 am, 1 அக்டோபர் 2020

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

4:43 am, 1 அக்டோபர் 2020

ஆந்திரத்தில் 6,751, கர்நாடகத்தில் 10,070 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

4:42 am, 1 அக்டோபர் 2020

மகாராஷ்டிரத்தில் புதிதாக 16,476 பேருக்கு கரோனா

 மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 16,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

1:06 am, 1 அக்டோபர் 2020

தமிழகத்தில் 6 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

 தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

12:33 am, 1 அக்டோபர் 2020

தில்லியில் புதிதாக 3,037 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,037 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

5:49 am, 30 செப்டம்பர் 2020

நாட்டில் இதுவரை 7.41 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐ.சி.எம்.ஆர்.

 நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒநேராளில் 10,86,688 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7,41,96,729-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

5:16 am, 30 செப்டம்பர் 2020

நாட்டில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 62 லட்சத்தை கடந்தது

 நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,25,764-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

4:57 am, 30 செப்டம்பர் 2020

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு!

 அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 71,88,071 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

4:57 am, 30 செப்டம்பர் 2020

கரோனா: உலகளவில் 2.51 கோடி பேர் குணமடைந்தனர்

 உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.51 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

4:14 am, 30 செப்டம்பர் 2020

ஆந்திரத்தில் 6,133, கர்நாடகத்தில் 8,856 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

2:01 am, 30 செப்டம்பர் 2020

தில்லியில் புதிதாக 3,390 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

12:44 am, 30 செப்டம்பர் 2020

கேரளத்தில் புதிதாக 8830 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 8830 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

12:44 am, 30 செப்டம்பர் 2020

தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
5:00 am, 29 செப்டம்பர் 2020

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு 70 ஆயிரமாகக் குறைந்தது

 நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று காலை கரோனா பாதிப்பு 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

4:04 am, 29 செப்டம்பர் 2020

ஆந்திரத்தில் 6,190, கர்நாடகத்தில் 10,453 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

3:27 am, 29 செப்டம்பர் 2020

நல்ல செய்தி: உலகளவில் கரோனா தொற்றிலிருந்து 2.48 கோடிப் பேர் குணம்

 உலகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.48 கோடியாக உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 3,35,47,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,48,76,304 கோடிப் பேர் குணமடைந்துள்ளனர். 10,06,351 பேர் பலியாகிவிட்டனர். விரிவான செய்திக்கு..

12:46 am, 29 செப்டம்பர் 2020

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
10:10 pm, 28 செப்டம்பர் 2020

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,11,516 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் புதிதாக 672 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,11,516 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

9:56 pm, 28 செப்டம்பர் 2020

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,232 பேருக்கு கரோனா; மேலும் 160 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,232 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 160 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

9:16 pm, 28 செப்டம்பர் 2020

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்வு

 சென்னையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

8:58 pm, 28 செப்டம்பர் 2020

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கரோனா தொற்று

 தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

6:12 am, 28 செப்டம்பர் 2020

நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது

 திங்கள்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

6:12 am, 28 செப்டம்பர் 2020

கரோனா: உலகளவில் 10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

 உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 9 மாதங்களாகியும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  விரிவான செய்திக்கு..

6:11 am, 28 செப்டம்பர் 2020

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கரோனா

 சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன். இவருக்கு அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மா.சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

மேலும் அவருடைய மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மா.சுப்பிரமணியன் 2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3:55 am, 28 செப்டம்பர் 2020

ஆந்திரத்தில் 5,487, கர்நாடகத்தில் 6,892 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

3:35 am, 28 செப்டம்பர் 2020

தில்லியில் புதிதாக 1,984 பேருக்கு கரோனா

 தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

2:21 am, 28 செப்டம்பர் 2020

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,306 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

12:52 am, 28 செப்டம்பர் 2020

தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
 
11:56 pm, 27 செப்டம்பர் 2020

கர்நாடக சட்டத்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

11:31 pm, 27 செப்டம்பர் 2020

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 10,656 ஆக உயர்வு

 சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தற்போது 10,656 ஆக  உயர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

11:30 pm, 27 செப்டம்பர் 2020

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கரோனா

 தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

8:36 pm, 27 செப்டம்பர் 2020

ரஷியாவில் புதிதாக 8,135 பேருக்கு தொற்று; மேலும் 61 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 61 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

8:21 pm, 27 செப்டம்பர் 2020

பாகிஸ்தானில் புதிதாக 566 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 3.10 லட்சத்தைத் தாண்டியது!

பாகிஸ்தானில் புதிதாக 566 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 3,10,841 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.