சொந்த மாநிலத்திற்கு ஸ்டாலின் கேடு செய்கிறார்: வைகோ குற்றச்சாட்டு
காவிரி நடுவர் மன்றத்திற்கும், மேலாண்மை வாரியத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் கருத்துக்களை வெளியிட்டு சொந்த மாநிலத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேடு செய்கிறார்.


காவிரி நடுவர் மன்றத்திற்கும், மேலாண்மை வாரியத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் கருத்துக்களை வெளியிட்டு சொந்த மாநிலத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேடு செய்கிறார். இது எதிரிக்கு இலக்காரமாய் போய்விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டிற்கு தற்போது சோதனை காலம். காவிரி உரிமைப் பிரச்னையிலும், அண்டை மாநிலங்களில் உள்ள நதி நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளைக் காப்பதிலும் முந்திய மத்திய காங்கிரஸ் அரசும், தற்போதையை நரேந்திரமோடி அரசும் மோசடி செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டியுள்ளது. கர்நாடக அரசு இதற்கு நிதி ஒதுக்கிவிட்டது. அணை கட்டடப்பட்டால் கபினி, கிருஷ்ணராஜசாகர், மேட்டூர் அணைகளுக்கு வெள்ள காலத்தில் கூட தண்ணீர் வராது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு நீர் கிடைக்காது. சென்னை உள்ளிட்ட 15 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழகத்தின் நலனைக் காப்பது மத்திய அரசின் கடமையாகும். கர்நாடகாவைப் போல தமிழகத்தின் குரலும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்த ஸ்டாலின், முதல் நாளில் ஏராளமான மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்ததாக செய்தி வெளியிட்டுவிட்டு, எங்களை அழைப்பது கோமாளித்தனமானது. தமிழக நலனை பாதுகாப்பதில் திமுக தவறிவிட்டது.
சிறுவாணி பிரச்னையில் அடிப்படை விஷயம் தெரியாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்திற்கும், மேலாண்மை வாரியத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கருத்துக்களை வெளியிட்டு சொந்த மாநிலத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கேடு செய்கிறார். இது எதிரிக்கு இலக்காரம் ஆகிவிடும்.
தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக கட்சிகள் ஒன்றாக இல்லையே என உபதேசம் செய்யும் ஸ்டாலின், முதலில் பிரச்னைகளின் அடிப்படையை புரிந்து பேச வேண்டும்.
கடலில் வீணாகும் நீர் தமிழகத்திற்கு வந்து சேரும் விதத்திலும், மற்ற பிரச்னைகளிலும் நியாயமாக நடந்து கொள்வோம் என கேரளா அரசு கூறினால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம்.
புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில், மாநில அரசியல் நடவடிக்கை தமிழக மக்கள் நல கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளில் சிறு நெறுடலைக்கூட ஏற்படுத்தாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...