இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரதமர் மோடியை விமர்சித்த ராகுலுக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி

லடாக் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

News image
பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 12:06 pm

DIN

லடாக் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு பாஜக தேசியச்செயலர் ராம் மாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

கரோனா பரவல், இந்திய பொருளாதாரம், லடாக் விவகாரம் போன்ற பல பிரச்சனைகள் குறித்து ராகுல்காந்தி தொடர்ந்து பாஜகவை கேள்வி எழுப்பி வருகிறார்.

அந்தவகையில், இந்திய ராணுவத்தின் திறமையையும், வீரத்தையும் பிரதமரைத் தவிர அனைவரும் நம்புகின்றனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். கோழைத்தனத்தால் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த அதிகாரத்தை யார் அளித்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே பாட்னாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2-ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசியச்செயலர் ராம் மாதவ், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, நம் நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பற்றி சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். இதனைக் கேட்டபிறகும் ஒருவர் இவ்வாறு பேசுகிறார் என்றால் அதன் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

லடாக் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், கரோனாவுக்கு எதிரான போரில் இறந்தவர்களுக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடுபவர்களுக்கு ராணுவ வீரர்கள் எவ்வாறு பதிலளிக்காமல் இருக்க முடியும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.