மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்’: மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
கே.பாலகிருஷ்ணன்
Updated On :12 ஆகஸ்ட் 2021, 1:41 pm

DIN

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிராம சபை கூட்டங்கள் என்பது மக்கள் நேரடியாக பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளையும், தேவைகளையும் அரசுக்கு  தெரிவிக்கும் ஜனநாயகத்தின் மிக முக்கியமானதொரு வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளதோடு கிராம சபை கூட்டங்கள் உரிய முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.