இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கியது

தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

News image
ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி .
Updated On :29 டிசம்பர் 2021, 6:22 am

DIN


ஈரோடு: தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி இன்று புதன்கிழமை (டிச.29) தொடங்கி வரும் 12.01.2022 வரை 15 நாள்களுக்கு நடைபெறுகின்றது.  கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 40 விற்பனை நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் போர்வைகள், கோரா சேலைகள், பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம் உள்ளிட்ட அனைத்து வகையான கைத்தறி ரகங்களும் இடம்பெற்றுள்ளன.

இக்காண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்திற்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம், சபை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.