இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
Updated On :9 ஜூலை 2021, 6:31 am

DIN

பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.