/

ஸ்டாலின் பதவியேற்பு: தலைமைச் செயலர் ஆலோசனை

மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது தொடர்பாக தலைமைச் செயலர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

News image
ஸ்டாலின் பதவியேற்பு: தலைமைச் செயலர் ஆலோசனை
Updated On :4 மே 2021, 11:21 am

DIN

மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது தொடர்பாக தலைமைச் செயலர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருவாரியான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே7 ஆம் தேதி பதவியேற்பார் என அறிவிப்பு வெளியானது. எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் பதவியேற்பு விழா தொடர்பாக தலைமைச் செயலர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.