‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்
By DIN | Published On : 10th August 2021 08:49 PM | Last Updated : 10th August 2021 08:49 PM | அ+அ அ- |

‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்
தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது வெள்ளை அறிக்கை அல்ல மஞ்சள் கடுதாசி என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
இதையும் படிக்க | ஓபிசி இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசின் இந்த வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை அறிக்கை தொடர்பாக மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பதிவில், “கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2021
மேலும், “இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்” என அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...