இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவிரியில் வெள்ளப் பெருக்கு! மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலியாக, மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் வியாழக்கிழமை காலை முதல் போக்குவரத்து நிறுத்தபட்டது.

News image
மேட்டூர் அனல் மின் நிலையம் சங்கிலி முனியப்பன் கோயில் வழியாக எடப்பாடி செல்லும் சாலையை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்.
Updated On :1 ஆகஸ்ட் 2024, 6:29 am

DIN

சேலம்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலியாக, மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் வியாழக்கிழமை காலை முதல் போக்குவரத்து நிறுத்தபட்டது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரும் அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீா் முழுமையாக 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் கூடுதல் நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து நீா் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையம் சங்கிலி முனியப்பன் கோயில் வழியாக எடப்பாடி செல்லும் சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை முதல் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையின் முன்பாக போலீசார் கான்கிரீட் தடுப்புகளை சாலையில் வைத்து போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர். இந்தப் பாதை அடைக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோயில், நாயக்கன்பட்டி, பொறையூர், செக்கானூர் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பள்ளி வாகனங்கள் இயக்க முடியாததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு காவிரி கிராஸ் பாலம் வழியாக இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.

மேட்டூர் - எடப்பாடி செல்லும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய அதிகாரிகள் அனுமதித்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் வளாக வழியாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.