சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சட்டப்பேரவை டிச. 9-ல் கூடுகிறது! டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தீர்மானம்!

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தனித் தீர்மானம்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 7:07 am

DIN

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு முன்னாதவே அறிவித்து இருந்தார்.

பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று(டிச. 2) அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிச. 9, 10 ஆகிய இரு நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல்

மேலும், சட்டப்பேரவையில் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில், “மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.