பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6வது நாளாக தொடர்வதைப் பற்றி..

News image

குழந்தை சேத்துனாவை மீட்கும் பணி 6 வது நாளாக தொடர்கிறது - vanishri

Updated On :28 டிசம்பர் 2024, 3:46 pm IST

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.

கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வயது பெண் குழந்தையான சேத்துனா, கடந்த டிச.23 அன்று 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க கடந்த திங்கள் கிழமை முதல் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அதனுள் பாதுகாப்பு உறைகள் இறக்கும் பணி இன்று (டிச.28) காலையுடன் நிறைவடைந்து, அந்த குழந்தைக்கு நேராக சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், தற்போது தோண்டப்பட்ட அந்த குழியின் வழியாக மின்விசிறிகளும், ஆகிஸ்ஜன் டேங்கும், விளக்குகளும் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், மீட்புப் பணி மிகவும் தாமதாமாகவும் அலட்சியப்போக்குடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அந்த குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் திங்கள் கிழமை விழுந்த குழந்தை இத்தனை நாள்களாக உணவுத் தண்ணீர் எதுவுமின்றி அந்த ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் படையினர் தொடர்ந்து திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பதினால் குழந்தையை வெளியே கொண்டுவருவது தாமதமாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த குழிக்குள் ஏதேனும் அதிகாரிகளின் குழந்தைகள் சிக்கியிருந்தால் இவ்வளவு தாமதமாக செயல்படுவார்களா ? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அந்த குழந்தையின் உறவினர்கள் மீட்புப் பணி குறித்து எந்த கேள்விக்கேட்டாலும், மாவட்ட ஆட்சியர் அதற்கு பதில் சொல்வார் என்று மீட்புப் படை அதிகாரிகள் கூறுவதாகவும் தற்போது வரையில் மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அந்த குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வருவோம் என மீட்புப் படை அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த செவ்வய்கிழமை (டிச.24) முதல் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையின் உடலில் எந்தவொரு அசையும் இல்லை என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.