10 லட்சம் கார்கள் விற்பனை: ஹுண்டாய் புதிய சாதனை!

இந்தியாவிலிருந்து மட்டும் இதுவரை 28 லட்சம் க்ரெட்டா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.
ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா  கார்
ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார்

இந்தியாவில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்து ஹுண்டாய் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார், இந்தியாவில் இரு வகைகளில் (வேரியன்ட்) கிடைக்கின்றன.

2015 முதல் தற்போதுவரை 10 லட்சம் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய வணிக சந்தையில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாவதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் மத்திய ரக சொகுசுக் கார்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவிலிருந்து மட்டும் இதுவரை 28 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுண்டாய் குறிப்பிட்டுள்ளது. இதுவும் ஹுண்டாய் நிறுவனத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய ஹுண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் கார்க், பலதரப்பட்ட இந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்ததால், க்ரெட்டா புதிய பிராண்டாக வளர்ந்துள்ளது. ஒரு மில்லியன் க்ரெட்டா கார்கள் இந்திய சாலைகளில் செல்கின்றன. இந்திய வாடிக்கையாளர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com