தூத்துக்குடியில் அதிகாலையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடியில் அதிகாலையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த சில நாள்களாக அனல் காற்று வீசியது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தூத்துக்குடியில் அதிகாலையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி
அமைச்சராக பகல் 3.30 மணிக்குப் பதவியேற்கிறார் பொன்முடி!
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் சாலை ஒரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் சாலை ஒரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர்.

இந்த நிலையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com