சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்: ஆட்சியர்
சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (அக்.18) வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.


சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை(அக்.18) வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் , வட தமிழகம் - தெற்கு ஆந்திரம் கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் கரையைக் கடந்தது. இது வலுவிழந்த நிலையில் இருந்ததால் சென்னையில் மழை பெய்யவில்லை.
இதற்கிடையே, வட தமிழக பகுதிகள், லட்சத்தீவு, அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் அக்.23-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் எழும்பூர், புரைசைவாக்கம், அடையாறு, வடபழனி, கிண்டி, பூந்தமல்லி, அம்பத்தூர் , அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை(அக்.18) வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...