சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

News image
விஸ்தாரா ஏா் நிறுவனம்
Updated On :20 அக்டோபர் 2024, 11:39 am

DIN

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாகவே ஏா் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஸ்டாா் ஏா், அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம், வழித்தடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிலையும் விமானத்தில் பயணிக்க பயணிகள் அச்சப்படும் சூழலும் உருவாகியுள்ளது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே விடுக்கப்படும் இந்த மிரட்டல்கள் புரளி என்பது கண்டறியப்படுகிறது.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சத்தீஸ்கரை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து மும்பை, சிங்கப்பூரில் இருந்து தில்லி, சிங்கப்பூரில் இருந்து புணே, பாலியில் இருந்து தில்லி, தில்லியில் இருந்து பிராங்பேர்ட் உள்ளிட்ட 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.