அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலா ஹாரிஸ் | பில்கேட்ஸ்

Published On :

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் தலைவர்களுடனான தொடர்பில் இருந்து விலகியிருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளதாக பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்றும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார கொள்கைகள், குடும்பக் கட்டுப்பாடு, உலகளாவிய சுகாதாரத் திட்டங்கள் பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

ஆனால், நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன். நான் நீண்டகாலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

பில்கேட்ஸின் முன்னாள் மனைவி, மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸும், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகளை வழங்கியுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, உலகப் பணக்காரர்களில் முதலிடத்திலும் டெக்னாலஜி துறையில் அசைக்கமுடியாதவராக இருக்கும் எலான் மஸ்க் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.

அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் ஜோ பைடன்(81) போட்டியிடுவதாக இருந்தது.

எனினும், டிரம்ப்புடன் நேரடி விவாதத்தில் தடுமாறியது, பிரசாரத்துக்கு மத்தியில் கரோனா தொற்று, வயது மூப்பு உள்பட பல முக்கியக் காரணங்களால் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி திடீரென அறிவித்தார். ஜோ பைடன், தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து துணை அதிபா் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.