புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

News image

மேட்டூர் அணை (கோப்புப்படம்)

DIN

Updated On :1 செப்டம்பர் 2024, 3:57 am

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று(செப். 1) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,396 கன அடியிலிருந்து வினாடிக்கு 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.56அடியிலிருந்து 115.82அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 86.95 டிஎம்சியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.