சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கும் தங்கம் விலை, இந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராம் ரூ.12,000-க்கும், பவுன் ரூ.96,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Gold prices surged today: How much did it rise per sovereign?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்வு

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

மீண்டும் அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



