சென்னை: ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடு என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தொழிலாளர் நாளான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே நாள் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழகம் எப்போதும் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை வளரும் தலைமுறை ஏற்றுகொள்ளவார்கள். ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடாகும்.
தமிழகம் எப்போதும் முன்னோடியாகும், அடுத்த பத்தாண்டுக்கு தேவையான வகையில் நமது மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். இதற்காக தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன்மேம்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தின் பயத்தை போக்கும் வகையிலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தோழி அமைப்பு செயல்படுத்துகிறது தமிழக அரசு என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

செயற்கை நுண்ணறிவு

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



